விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த மகள்; பேரதிர்ச்சி கொடுத்த அப்பா - தாய்க்கு நேர்ந்த சோகம்!

Tamil nadu Cuddalore Death
By Jiyath Oct 28, 2023 07:48 AM GMT
Report

கடலூரில் மனைவி இறந்தது கூட தெரியாமல் ஒரே வீட்டில் கணவர் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இறந்து கிடந்த பெண்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், முல்லை நகரை சேர்ந்த தம்பதி மூர்த்தி (59) - அனுஷ்யா (56). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பவித்ரா புதுச்சேரியிலும், இரண்டாவது மகள் அபிதா கோவையிலும் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த மகள்; பேரதிர்ச்சி கொடுத்த அப்பா - தாய்க்கு நேர்ந்த சோகம்! | Husband In Same House Without Knowing Wife Death

மூர்த்தியும் அவரின் மனைவி அனுஷ்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அனுஷ்யா தைராய்டு, சர்க்கரை நோய் மற்றும் மனநல சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நாள்தோறும் மாத்திரைகள் எடுத்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்காக மூத்த மகள் பவித்ரா வீட்டிற்கு வந்தபோது, வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அவர் படுக்கையறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு உடல் முழுவதும் வீக்கமடைந்து, தாய் அனுஷ்யா உயிரிழந்து கிடந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதனை கண்ட பவித்ரா அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். உடனடியாக அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த அனுஷ்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த மகள்; பேரதிர்ச்சி கொடுத்த அப்பா - தாய்க்கு நேர்ந்த சோகம்! | Husband In Same House Without Knowing Wife Death

இதனையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அழுகிய நிலையில், துர்நாற்றத்துடன் பிணமாக கண்டெடுக்கப்பட்ட மனைவி அனுஷ்யா இறந்தது கூட தெரியாமல் கணவர் மூர்த்தி அதே வீட்டிலேயே வசித்து வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அனுஷ்யா இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும் இது கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்தது கூட தெரியாமல் ஒரே வீட்டில் கணவர் இருந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.