மனைவியை கட்டிப்பிடித்துக் கொண்டு ரயில் முன் கணவர் செய்த காரியம் - திடுக்கிடும் வீடியோ
மனைவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ரயில் முன் கணவர் குதித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
கொல்கத்தா மெட்ரோவின் நோபரா ரயில் நிலையத்தில் மனைவியைத் தூக்கிக்கொண்டு ரயில் முன் குதித்து கணவன் தற்கொலைக்கு முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ரயில் நிலைய நடைமேடையில் கணவன் மனைவி இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். மனைவி முன்னால் நடந்து செல்ல கணவர் பின் நடந்து செல்கிறார்.
பகீர் வீடியோ
அப்போது தண்டவாளத்தில் மெட்ரோ ரயில் வரவும், நடைமேடையில் நடந்து சென்ற தன் மனைவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ரயில் முன் குதிக்கிறார். இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
कोलकाता नोवापारा मैट्रो स्टेशन पर प्रेमी युगल ने ट्रेन के आगे लगाई छलांग....... pic.twitter.com/I2aDi7GVHo
— Chandan Pandey(चंदन पांडेय) (@Realchandan21) June 4, 2023
உடனே, அவர்களை அங்கிருந்த மெட்ரோ ஊழியர்கள் உடனடியாகக் காப்பாற்றியுள்ளனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக கவி சுபாஷிலிருந்து தக்னேஷ்வர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.