கணவன் மனைவி பிரிந்தாலும்.. அப்பா குழந்தையை பார்க்கக் கூடாது? நீதிமன்றம் உத்தரவு!
கணவன் மனைவி பிரிந்திருந்தாலும் அப்பா குழந்தையை பார்க்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம்
சென்னையை சேர்ந்தவர்கள் அம்பிகா மற்றும் சுஜி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே இந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சில மனக்கசப்பால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் குழந்தை தாய் அம்பிகாவிடம் உள்ளது. இந்த நிலையில், குழந்தையை தனியாக வளர்த்து வருவதால் தனது மருத்துவச் செலவு, குழந்தை படிப்பு மற்றும் மாதம் பராமரிப்பு செலவாக ஜூவனாம்சம் வழங்க வேண்டும் என அம்பிகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவச் செலவு, குழந்தை படிப்புக்கான செலவு மற்றும் மாதம் 40 ஆயிரம் ரூபாய் வழங்க சுஜிக்கு உத்தரவிட்டது மட்டுமின்றி மாதம் ஒருமுறை குழந்தையைப் பார்க்க சுஜிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அம்பிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி லட்சுமிநாராயணன், “இந்து திருமணச் சட்டப்படி,
குழந்தையைப் பார்க்க கணவருக்கு முழு உரிமை உள்ளது. அந்த உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது. குழந்தை தந்தையை அறிந்து வளர்வதே நல்லது” என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.