கணவர் பெட்ரோல் போட போன கேப்பில் அவரது மனைவியின் வாயை பொத்தி கற்பழித்த கொடூரர்!
டெல்லியில் தன் வாகனத்துக்கு கணவர் பெட்ரோல் போட சென்ற கேப்பில், அவரது மனைவியை டிரைவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே உள்ள ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு வாடகை விடுதியில் கணவர், மனைவி, குழந்தைகள் என வசித்து வந்துள்ளனர்.
அந்த விடுதிக்கு பக்கத்து வீட்டில் ஒரு கேப் டிரைவரும் வசித்து வந்தார். இவர் பல நாட்களாக அந்த பெண்ணை பார்த்து கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் கணவர் தன்னுடைய மனைவியை தூங்க சொல்லிவிட்டு பெட்ரோல் போட சென்றுள்ளார்,.
இதனை கண்காணித்த பக்கத்துவீட்டு கேப் டிரைவர், கணவன் சென்றவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது வீட்டிற்கு புகுந்துள்ளார்.
பின்னர் தூங்கி கொண்டிருந்த அந்த பெண்ணின் வாயை பொத்தி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்க, போலீசாரும் அந்த கேப் டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.