முதலாளியுடன் உறவு கொள்ள வற்புறுத்திய கணவர் - மறுத்த மனைவிக்கு முத்தலாக்
முதலாளியுடன் படுக்கையை பகிருமாறு கணவர் வற்புத்தியுள்ளார்.
2வது திருமணம்
மும்பை அருகில் உள்ள கல்யாண் என்ற இடத்தில் வசிக்கும் சோஹைல் ஷேக்(45) என்பவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் மனைவியுடன் விவாகரத்து பெறாமலே கடந்த ஜனவரி மாதம் 28 வயதான இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
சித்திரவதை
திருமணமான சில மாதங்களிலே முதல் மனைவியிடம் விவாகரத்து பெற ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என 2வது மனைவியிடம் பணம் கேட்டு சித்திரவதை செய்ய தொடங்கியுள்ளார்.
மேலும் அலுவலகத்தில் பார்ட்டி நடப்பதாக கூறி அழைத்து சென்று, தனது நிறுவன உரிமையாளரிடம் படுக்கையை பகிருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு மனைவி மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.
முத்தலாக்
இதனை தொடர்ந்து தனது மனைவிக்கு மூன்று முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததோடு, அவரை வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதனையடுத்து பசார்பேத் காவல் நிலையத்தில் சோஹைல் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் 115(2), 351(2), 351(3), 352 பிரித்ய நீதி சன்ஹிதா மற்றும் முஸ்லீம் பெண் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.