மனைவி தான் வீட்டு வேலை செய்யணும் என கணவன் எதிர்பார்க்கக்கூடாது- உயர்நீதிமன்றம் கருத்து
டீ போட்டுக் கொடுக்காததால் கணவன் மனைவியைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த வழக்கு, மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மொஹைத், தேரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகள் சாதாரணமானவை அல்ல.
இம்மாதிரியான கொலைச் சம்பவங்களால் சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வு கட்டமைக்கப்படுகிறது. மனைவி என்பவள் ஒரு பொருளோ அல்லது உங்களின் தனிப்பட்ட உடமையோ கிடையாது. அவளும் உங்களைப் போல ஒரு உயிர் தான். ஆண், பெண் பணிகளில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகரித்திருக்கிறது.
மனைவி என்பதாலேயே அவர் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்க்கிறார்.
அப்படியான எண்ணம் மிகவும் தவறானது. அவ்வாறு மனைவியிடம் எதிர்பார்க்கக் கூடாது எனகூறிய நீதி மன்றம்கொலை செய்த நபரின் ஜாமின் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
அவர் கொலையாளி என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என கருதப்படுகிறது.