கோழிக்கறி குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு கொடுத்த மனைவி - கோடாரியால் வெட்டி கொன்ற கணவன்..!
கோழிக்கறி குழம்பு தகராறில் மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி கொலை
தெலுங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் கிஷ்டம்பேட்டையை சேர்ந்த தம்பதியினர் போஷம் மற்றும் சங்கரம்மா. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று இரவில் வீடு திரும்பிய போஷம் மனைவியிடம் கோழிக்கறி குழம்பு வைக்க சொல்லிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.
பின்னர் இரவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்திருக்கிறார் போஷம். வந்தவுடன் மனைவியிடம் கோழிக்கறி குழம்பு கேட்டிருக்கிறார். ஆனால் சங்கரம்மா கத்திரிக்காய் குழம்பை ஊற்ற ஆத்திரம் அடைந்திருக்கிறார் போஷம். இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது பெரும் தகராறாக மாறியுள்ளது.
இதனையடுத்து நள்ளிரவு சங்கரம்மா வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது கோடாரியை எடுத்து சங்கரம்மாவின் தலையில் வெட்டியுள்ளார் போஷம். தலை துண்டான நிலையில் சங்கரம்மா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் போஷம். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் தேடல்
சம்பவ இடத்திற்கு வந்த சென்னூரு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் போஷத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.