நடுரோட்டில் உயிருக்கு போராடிய கணவன்; கெஞ்சிய மனைவி - கண்டுக்காத மக்கள்

Heart Attack Bengaluru Death
By Sumathi Dec 17, 2025 04:46 PM GMT
Report

சாலையில் உயிருக்குப் போராடிய கணவனை காப்பாற்ற மனைவி உயிருக்கு போராடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் கணவன்

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடரமணன். இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரின் மனைவி ரூபா அவரை இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

நடுரோட்டில் உயிருக்கு போராடிய கணவன்; கெஞ்சிய மனைவி - கண்டுக்காத மக்கள் | Husband Died At Road Wife Suffer Bengaluru

வெங்கடரமணனுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி வேறு ஒரு மருத்துவமனைக்குச் செல்லும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆம்புலன்ஸில் செல்லமாம் என்று நினைத்தபோது ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.

 போராடிய மனைவி

ஆனால் வழியில் வெங்கடரமணனுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களது வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் வெங்கடரமணன் மற்றும் அவரது மனைவி காயமடைந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் மருத்துவமனைக்குச் செல்ல உதவி கேட்டார்.

மேடையில் மணமகன் கேட்ட அந்த வார்த்தை - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

மேடையில் மணமகன் கேட்ட அந்த வார்த்தை - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

ஆனால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. பின் டாக்சி டிரைவர் வண்டியை நிறுத்தி வெங்கடரமணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கடரமணனின் மனைவி கூறுகையில்,''என் கணவனைக் காப்பாற்ற மனிதாபிமானம் தவறிவிட்டது.

நான் சாலையில் ரத்தத்துடன் நின்று கொண்டு வாகானங்களை நிறுத்தும்படி கெஞ்சினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. என் கணவர் சாலையில் பல நிமிடங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்'' என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.