என் பொண்டாட்டி தான் எல்லாத்துக்கும் காரணம் - தம்பியை கூட படிக்க வைக்க முடியல...கணவர் தற்கொலை
திண்டுக்கல்லில் சரக்கு வேன் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு முன் ஓட்டுநர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
வேன் ஓட்டுநர் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே தாசிரிப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் சரக்கு வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் வினோதினி என்பவருக்கும் திருமணமாகி 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் வீட்டிலிருந்த 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு மனைவி தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணமூர்த்தி, தம்பியை படிக்க வைக்க பணமில்லாமல் திண்டாடுவதாக கூறி செல்போனில் பேசி வீடியோ பதிவு செய்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.