ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் - பெண்ணை உயிரோடு எரித்த கணவர்
பெண்ணை வரதட்சணை கேட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வரதட்சனை கொடுமை
உத்தரப்பிரதேசம், நொய்டாவில் ரூ.36 லட்சம் வரதட்சணைக்காக கணவன் வீட்டார் பெண்ணைத் தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நிக்கியின் கணவர் விபின், அவரது தாயார் மற்றும் மைத்துனர் ரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விபின் போலீஸ் காவலில் இருந்து தப்பிச்செல்ல முயன்றதாக கூறி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் விபின் காலில் காயம் அடைந்தார். பின் விபினிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''சம்பவம் நடந்த அன்று நிக்கி தனது கணவரிடம் தான் நடத்தி வந்த பியூட்டி பார்லரை திறக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
கணவன் வெறிச்செயல்
ஆனால் அதற்கு விபின் அனுமதி கொடுக்கவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நிக்கி தானும், தனது சகோதரியும் சேர்ந்து பியூட்டி பார்லரை திறப்போம் என்றும், தங்களை யாரும் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடுவது, பியூட்டி பார்லர் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று விபின் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நடந்த சண்டையில் நிக்கி தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்'' என தெரிவித்துள்ளனர்.
விபின் மற்றும் அவரது சகோதரருக்கு வேலை கிடையாது. வீட்டில் சிறிய அளவில் மளிகை கடை நடத்துகின்றனர். எனது சகோதரிகள் தங்களது கணவர்களிடம் பணம் கேட்காமல் சொந்தமாக குழந்தைகளின் படிப்பு செலவை பார்த்துக்கொள்கின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நிக்கியும், விபினும் திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து கடந்த 9 ஆண்டுகளாக விபின் தனது மனைவி நிக்கியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.