உருவானது புதிய தாஜ்மாஹால் மீண்டும் தோன்றிய ஷாஜகான் - வைரலாகும் புகைப்படம்
காதலி மும்தாஜூக்காக ஷாஜஹான் தாஜ்மஹாலை கட்டி பரிசளித்தார்.அது உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஆக்ராவில் உள்ள காதல் சின்னமான தாஜ்மஹாலை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தனது மனைவிக்காக தாஜ்மஹாலை போன்று வீடு ஒன்றை கட்டி பரிசளித்து இருக்கிறார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ்.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் வசிக்கும் ஆனந்த் பிரகாஷ் சௌக்சே தனது மனைவிக்காக தாஜ்மஹால் போன்ற ஒரு வீட்டை கட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

சுமார் 8100 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த வீட்டில் 6 படுக்கையறைகள்,ஒரு சமையலறை,நுாலகம் உள்ளிட்ட அறைகள் அமைந்துள்ளன.
வங்கதேசத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் உதவியுடன் அந்த தாஜ்மஹால் வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் வீடு குறித்து பேசிய ஆனந்த் குமார் சௌக்சே மற்றும் அவரது மனைவி மஞ்சுஷா சௌக்சே தங்களுக்கு திருமணம் ஆகி 27 ஆண்டுகள் ஆகிறது.

“ஒரு நாள் என் மனைவி கேலியாக என்னிடம் அவளுக்காக நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டாள். உன் அன்பிற்காக தாஜ்மஹால் கட்டுவேன் என்று கூறியதால் அவளுக்காக இந்த தாஜ்மஹாலை போன்ற வீட்டை கட்டி பரிசளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.கணவர் தன் மனைவிக்காக தாஜ்மஹாலை போன்று வீட்டை கட்டியுள்ளதால் மீண்டும் ஒரு ஷாஜஹான் உருவாகி இருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.