மனைவியை கொன்றுவிட்டு உடலை எரித்த கணவர்

By Fathima Oct 31, 2026 04:58 AM GMT
Report

கடலூரில் சிதம்பரம் அருகே மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு உடலை எரித்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 34). இவருடைய மனைவி சிவகாமி(வயது 30).

காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது, இந்நிலையில் நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த ரவிச்சந்திரன் சிவகாமியை தாக்கியதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

மனைவியை கொன்றுவிட்டு உடலை எரித்த கணவர் | Husband Beats Wife To Death And Burns Her Body

இதனால் பதறிப்போன ரவிச்சந்திரன் என்ன செய்வதென்று தெரியாமல் சிவகாமியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று புதைத்துள்ளார்.

இதற்கிடையே கிராம உதவியாளர் வட்டாட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து ரவிச்சந்திரனையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தையையும் போலிசார் கைது செய்தனர்.