நடுரோட்டில் கர்ப்பிணி மனைவியின் தலையில் கல்லை போட்ட கணவன் - குலைநடுங்க வைத்த சம்பவம்
கணவர், கர்ப்பிணி மனைவியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி மனைவி
தெலங்கானா, விகாராபாத்தைச் சேர்ந்தவர் முகமது பஸ்ரத்(32). இவர் வீட்டு டெக்கரேஷன் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2023ல் அஜ்மீர் தர்காவிற்கு சென்றுள்ளார்.
அப்போது பேருந்து பயணத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷபானா பர்வீன்(22) என்பவரை சந்தித்துள்ளார். பின் அந்த நட்பு காதலாக மாறி, திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து ஐதராபாத்தில் பஸ்ரத் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
நாளடைவில், குடும்பச் சண்டை காரணமாக கணவன், மனைவி இருவரும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணியான மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கணவன் வெறிச்செயல்
பின் வெளியே வந்த நிலையில், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பஸ்ரத், தனது மனைவி கர்ப்பிணி என்றும் பாராமல் அவரின் வயிற்றில், ஓடி வந்து எட்டி உதைத்துள்ளார். இதில், வலி தாங்க முடியாமல் நடு ரோட்டில் சுருண்டு விழுந்துள்ளார்.
இருப்பினும், சிமெண்ட் செங்கல்லை எடுத்து ஷாபானாவின் மார்பிலும், தலையிலும் மாறி மாறி போட்டு தாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
இந்த தகவலறிந்து விரைந்த போலீஸார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு பஸ்ரத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.