ஜெயிலிலிருந்து வந்த கணவன், வேறு ஒருவருடன் வாழ்ந்த மனைவி - அடுத்த நடந்த கொடூரம்

killed jail husband arrive wife married
By Anupriyamkumaresan Sep 06, 2021 07:38 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

மும்பையில், தான் ஜெயிலுக்கு போனதும் தன் மனைவிக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்த மாமியாரை, மருமகேனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விலே பார்லேவில் வசிக்கும் 42 வயதான இக்பால் அப்பாஸ் ஷேக் என்பவர் 2011-ல் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இக்பால் அப்பாஸ் மீது உள்ள 28 வழக்குகளில் அவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயிலிலிருந்து வந்த கணவன், வேறு ஒருவருடன் வாழ்ந்த மனைவி - அடுத்த நடந்த கொடூரம் | Husband Arrive From Jail Wife Marry Another Killed

இதனை தொடர்ந்து கடந்த வாரம் சிறையில் இருந்து வெளிவந்த இவர், நேராக அவர் மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது மாமியார், என் மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும், அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இங்கிருந்து புறப்பட்டலாம் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர், கடைக்கு சென்று அருவாள் வாங்கி வந்து மாமியாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இக்பாலை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.