மனைவியை ஆபாசமாக படம் எடுத்த கணவன் குடும்பத்துடன் கைது.
மனைவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய கணவன் குடும்பத்துடன் கைது. சென்னை ஆவடியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் சமீபத்தில் அடையாறு சேர்ந்த பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்திற்காக பிரிந்த அவர் தனது மனைவியை ஆபாசமாக படம் எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட வைக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.
மறுத்தால் இணையதளத்தில் புகைப்படத்தைப் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து பிரசன்ன வெங்கடேசன் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கி 5 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை பிடுங்கிக் கொண்டு துரத்தி விட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து
இதற்கு உடந்தையாக இருந்த பிரசன்ன வெங்கடேசனின் அப்பா ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரை கைது செய்தனர்.