காதலர் தினத்தன்று இணைபிரியாமல் உயிரிழந்த காதல் தம்பதி - சோகச் சம்பவம்
death
nature
husband
wife
loversday
sadnews
By Nandhini
திருவாரூர் மாவட்டம், மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி பிள்ளை (78). இவரது மனைவி சந்திராமாள் (76). பக்கிரிசாமி பிள்ளை கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.
இதனிடையே நேற்று காலை பக்கிரிசாமி பிள்ளை உயிரிழந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி சந்திராமாள் (76) இன்று விடியற்காலை உயிரிழந்தார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
தங்களது வாழ்க்கையில் இருவரும் சந்தோசமாக இருந்து வந்துள்ளனர். காதலர் தினமான இன்று காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் உயிரிழந்தது குடும்பத்தாரிடமும், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.