மனைவி ஒரு பெண்ணே இல்லை: திருநங்கை - அதிர்ச்சியில் கணவன் செய்த காரியம்!
உ.பியில் திருமணமான 2 மாதம் கழித்து தன் மனைவி ஒரு திருநங்கை என கணவனுக்கு தெரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மாநிலம் கான்பூர் மாவட்டம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே மாவட்டத்தின் பான்கி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் திருமணமத்திற்கு பிறகு கணவன், தன் மனைவியுடன் சேர்ந்து இருக்க பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் மனைவி தனக்கு உடல் நிலை சரியில்லை என தட்டிக்கழித்தே வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கணவன், மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்று அவரது சந்தேகத்தை கேட்டுள்ளார். அவரது மனைவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஒரு பெண்ணே இல்லை என்றும், அவர் ஒரு திருநங்கை என்றும் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.