கர்ப்பிணியை கொன்று வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய கொடூர தம்பதி!
கர்ப்பிணியை கடத்தி, கொன்று வயிற்றில் இருந்த குழந்தையை தம்பதி திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்ப்பிணி
மெக்சிகோ, வெராகுரூஸ் நகரில் பெண்ணின் சடலம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து அதுகுறித்து விசாரித்ததில், ரோசா ஜசலா கேஸ்டிரோ(20) கர்ப்பிணி என்பது தெரியவந்தது. அவரை கணவன் மற்றும் மனைவி என இருவர் சேர்ந்து திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர்.

சமூக ஊடகம் வழியே கொன்சாலோ மற்றும் வெரோனிகா என்ற தம்பதி அந்த கர்ப்பிணியை தொடர்பு கொண்டுள்ளனர். மேலும், அவருக்கு பிறக்க போகும் குழந்தைக்கு தேவையான ஆடைகளை நாங்கள் தருகிறோம் என அவர்களை சந்திக்க விமான நிலையம் வர கூறியுள்ளனர்.
குழந்தை திருட்டு
அதன்படி, ரோசா அவர்களைச் சந்தித்து வாகனத்தில் அவர்களுடன் சென்றுள்ளார். அதன்பின், அவர்கள் பெண்ணை கடத்தி, படுகொலை செய்து வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இதில் ரோசா உயிரிழந்துவிட்டார்.
கடத்திய பெண்ணுக்கு குழந்தை பெற்றெடுக்க முடியாத சூழலில், குழந்தையை திருடியதாக கூறப்படுகிறது. தற்போது தம்பதியிடம் இருந்து பெண் குழந்தை கைப்பற்றப்பட்டு உள்ளது. அது நல்ல நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.