மனைவியை கட்டாயப்படுத்தி நண்பருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்!
கணவனே நண்பருடன் சேர்ந்து மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆதி நாராயணன். இவர் 10 ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆதி நாராயணன் கார் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கோவை காந்திபுரத்தில் பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கக் கூடிய கார்த்திகேயன் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்துவது வழக்கம். ஆதி நாராயணன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இருவரும் குடித்துவிட்டு ஆதி நாராயணன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஆதி நாராயணன் போதையில் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து மனைவிக்கு கொடுத்துள்ளார்.
அதனை குடிக்க மறுத்தபோது வலுக்கட்டாயமாக மனைவியின் வாயில் ஊற்றியுள்ளார். அப்போது மனைவி அதை தட்டிவிட்டு படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஆதி நாராயணன் தனது நண்பர் கார்த்திகேயனுடன் உடலுறவு கொள்ளுமாரு வற்புறுத்தியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்த மனைவியை கார்த்திகேயன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என்று ஆதி நாராயணன் மிரட்டியுள்ளார்.
கைது
இந்நிலையில் அந்த பெண் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆதி நாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.