20 வயது பெண்ணுடன் கணவன் உல்லாசம் - இருவரையும் கம்பத்தில் கட்டி சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்!

Relationship
By Sumathi Aug 21, 2023 09:26 AM GMT
Report

தகாத உறவில் இருந்த இளைஞரையும், பெண்ணையும் ஊர்மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தகாத உறவு 

திரிபுரா, பெலோனியா அடுத்துள்ள ஈஷன்சந்திரநகர் என்ற பகுதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருக்கு அதே பகுதியில் உள்ள 20 வயது பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

20 வயது பெண்ணுடன் கணவன் உல்லாசம் - இருவரையும் கம்பத்தில் கட்டி சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்! | Husband Affair With Young Girl Tripura

தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும், வீட்டைச் சுற்றி வளைத்து சிறை பிடித்துள்ளனர்.

சரமாரி தாக்குதல்

கதவை உடைத்து உள்ளே சென்று, 2 பேரையும் கட்டி தரதரவென இழுத்து வந்து கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அதன்பின், பஞ்சாயத்து தலைவர்கள், அந்த இளைஞரின் மனைவியுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து விரைந்த போலீஸார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.