கள்ளக்காதலியுடன் உல்லாசத்தில் கணவன்; சிக்க வைத்த மனைவி - காரணத்தால் மிரண்ட போலீஸ்
கணவரை போலீஸில் சிக்கவைக்க மனைவி கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி
அங்கு பெண் ஒருவர் 10 கிலோ கஞ்சாவுடன் தங்கி இருப்பதாகவும், அதனை வேறு ஒருவருக்கு கைமாற்ற உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். உடனே போலீஸார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று குறிப்பிட்ட வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
மனைவியின் செயல்
அங்கு ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆய்வு செய்ததில் கஞ்சா எதுவும் சிக்கவில்லை. பின் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது அந்த நபரின் மனைவி என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தன்னுடன் வாழாமல் அங்கு இருந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு இருவரும் அடிக்கடி வெளியே சென்று தங்கி உல்லாசமாக இருந்ததால் இருவரையும் சிக்க வைக்க கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் பொய்யான தகவலை சொல்லக்கூடாது என்று அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடன் இருந்த கள்ளக்காதலியையும் எச்சரித்துள்ளனர்.