3 வருட லிவ் இன் ..திருமணமான 2 நாளில் எஸ்கேப்..தர்ணா செய்த சென்னை பெண் காவலர்
திருமணமான இரண்டே நாளில் கணவர் தலைமறைவான நிலையில், நள்ளிரவில் சென்னை பெண் காவலர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
3 வருடமாக லிவ் இன்
திருவாரூர் மாவட்டம் தண்டலை பகுதியை சேர்ந்தவர் அஜித். சென்னையில் பெருநகர காவல்துறையில் இரண்டாவது நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கும் இவருடன் பணிபுரிந்து வந்த மதுமிதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலே இருவரும் லிவ் இன் உறவில் இருந்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பமடைந்துள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அவர் அஜித்திடம் மதுமிதா வற்புறுத்தியிருக்கிறார். திருமணம் செய்துகொள்ள தயங்கிய அஜித், திருவாரூர் வந்துள்ளார்.
இது குறித்து மதுமிதா புகார் அளித்த பிறகு, இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணமான இரண்டே நாளில், நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அஜித் தலைமறைவாகியுள்ளார்.
தலைமறைவான கணவர்
இதன் காரணமாக திருவாரூரிலுள்ள அஜித்தின் வீட்டிற்கு வந்த மதுமிதா அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மதுமிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுமிதா, இது குறித்து திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.