வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... - வீசப்போகும் சூறாவளி காற்று - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

India Regional Meteorological Centre
By Nandhini Aug 05, 2022 08:43 AM GMT
Report

வங்க கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பருவமழை மேலும் தீவிரமடைய உள்ளது.

ஒடிசாவில் சில பகுதியில் மிக கனமழை பெய்யும். நாளை முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை பெய்யும். வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல்பகுதியில் சூறாவளி காற்றும் மணிக்கு 45 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் இருக்கும்.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறக்கூடுமா என்பது பின்னர் தெரியவரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. 

Hurricane wind