பசிக்கும் முன் பத்தும் பறக்கும் - சுவற்றில் காட்சிப்படுத்தப்பட்ட வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்ட மாணவர்
பசிக்கு முன் பத்தும் பறக்கும் என்பது பழமொழி அதற்கு ஏற்றார்போல் மாணவர் ஒருவர் கலைப்படையாக சுவரில் டேப் போட்டு ஒட்டப்பட்டு இருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எனக்கும் பசிக்கும்ல..
தென் கொரியாவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற நோ ஹூன் சூ என்ற மாணவருக்கு பசி எடுத்துள்ளது. இதனால் அந்த மாணவர் சுவற்றில் காட்சிக்காக ஒட்டப்பட்டிருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.

பின்னர் சுவற்றில் தோலை பழம் இருந்த சுவற்றில் அதே டேப் கொண்டு ஒட்டியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அருங்காட்சியகம் சார்பில் வாழைப்பழத்தின் தோல் நீக்கப்பட்டு வேறொரு பழம் அதே மாதிரி டேப் கொண்டு சுவற்றில் ஒட்டப்பட்டது.
வைரலான வீடியோ
அருங்காட்சியகத்தில் இவ்வாறு ஒட்டப்படும் பழம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு விடும் என்று கேடிலன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாணவர் நோ ஹூன் சூ தெரிவிக்கையில் நான் காலை உணவை சாப்பிடாததால் அதிக பசி ஏற்பட்டதான் காரணமாக இந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டேன் என தெரிவித்துள்ளார்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan