கடும் பஞ்சத்தில் ஆப்கான்... பேரழிவில் 1.4 கோடி மக்கள்.. அதிர்ச்சி கொடுக்கும் ஐ.நா ரிப்போர்ட்!
ஆப்கானை தற்போது தாலிபான்கள் ஆக்கிரமித்து ஆட்சியமைக்க உள்ளனர், இந்த நிலையில் அங்கு வாழும் 1.4 கோடி மக்கள் கடும் வறுமையிலும் பசியிலும் வாடுவதாக ஐ. நா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதால் கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருந்த தாலிபான்கள் உடனடியாக ஆப்கன் படைகள் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கினர்.
முதலில் எல்லைப் பகுதிகளையும் கிராமப்புறங்களையும் கைப்பற்றிய தாலிபான்கள் அடுத்து நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திய தாலிபான்கள் தலைநகர் காபூலை கடந்த வாரம் கைப்பற்றினர்.
பல பகுதிகளில் தாலிபான்களுக்கு ஆப்கன் படைகள் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டவில்லை, மேலும், அந்நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகம் தப்பிச் சென்றனர்,
எளிதாக ஆப்கானை தன் வசப்படுத்திய தாலிபன்கள் ,புதிய ஆட்சியினை மலர செய்வோம் என கூறினர், ஆனால் அங்கு உள்ள மக்களின் நிலை மிகவும் கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது.

பல்வேறு இடங்களிலும் அமைதியற்ற சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், சுமார் 3.8 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஆப்கனில் 1.4 கோடி பேர் கடுமையான பசி பஞ்சத்தில் இருப்பதாக ஐநாவின் உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ. நா உலக உணவுத் திட்ட அமைப்பின் இயக்குநர் மேரி எலன் மெக்ரோடி தெரிவித்துள்ள தகவலின் படி ஆப்கானில் தற்போது ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் காரணமாக கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம் ஆப்கனில் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்ல கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார பாதிப்பும் இருப்பதால் ஆப்கனில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆப்கானில் நிலவி வரும் பஞ்சம் மற்றும் கடும் வறட்சி காரணமாக பயிர்களும் கால்நடைகளும் அழிந்துவிட்டது.

இதில் ,தற்போது தாலிபன்கள் நடவடிக்கையால் பல்லாயிரக் கணக்கான மக்கள் புதிய இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் ஆகவே ஆப்கானில் கடும் பஞ்சம் நிலவுகிறது. தற்போது வரை ஆப்கானில் அமைதி திரும்பவில்லை .
இதே நிலை வரும் காலங்களில் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான மக்களைஆப்கான் இழக்கும் சூழல் வரலாம் என மேரி எலன் மெக்ரோடி கூறியுள்ளார்.