உக்ரைனுக்கு ஆயுதம் எல்லாம் கொடுக்க முடியாது - கைவிரித்த ஹங்கேரி பிரதமர்..!
உக்ரைனுக்கு ஆயுதம் எல்லாம் கொடுக்க முடியாது என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் திட்டவட்டமாக கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து உக்ரைனுக்கு பல்வேறு உலக நாடுகளும் உதவி புரிந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்த ஆயுதங்கள் கோரியும்,
மேலும் ரஷ்யா மீது கொருளாதார தடை விதிக்க கோரியும் ஐரோப்பிய நாடான ஹங்கேரிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவரின் வேண்டுகோளை அந்நாட்டு பிரதமர் நிராகரித்துள்ளார்.இது குறித்து அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் வெளியிட்டுள்ள வீடியோவில்
“ உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் வேண்டுகோள்கள், ஹங்கேரியின் நலன்களுக்கு எதிரானவை. ரஷிய எரிசக்திக்கு தடை போட்டால் அது எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மந்தமாக்கும்” என கூறி உள்ளார்.
உக்ரைன் எல்லையில் உள்ள ஹங்கேரி, அந்த நாட்டுக்கு போரிட ஆயுதங்கள் தர மறுத்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.