ரொம்ப நாள் ஆகாது...நிலவில் மனிதர்கள் குடியேறலாம்..! இஸ்ரோ திட்ட இயக்குனர்

India ISRO
By Karthick Nov 28, 2023 08:38 AM GMT
Report

நிலவில் மனிதர்களை குடியேற்றவது குறித்து இஸ்ரோ திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நிகர் ஷாஜி உரை

சேலத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகின்றது. அந்நிகழ்ச்சியில், இஸ்ரோ திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் மூலம் சூரியனின்வெப்ப சூழல், கதிர் வீச்சு, காந்தப்புயல் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய முடியும்.

humans-colony-in-moon-isro-chief-answers

பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான பகுதி ஈர்ப்பு விசை சமமாக இருக்கக் கூடிய லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இடத்தில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கிருந்தபடி, சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.

நிலவில் குடியேற்றம்

தொடர்ந்து பேசிய அவர், இந்த கண்காணிப்பின் காரணமாக பல இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்திட முடியும் என்றும் கூறினார்.

humans-colony-in-moon-isro-chief-answers

மேலும், மனிதர்களை நிலவில் குடியேற்றுவது என்பது இன்னும் இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.