மாநில மனித உரிமை ஆணையம் இதில் தலையிட முடியாது : நீதிபதி ஜெயசந்திரன்
அமைச்சருக்கு சிகிச்சை
நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்ததா? என்பது குறித்து ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மனித உரிமை ஆணையம்
இந்த நிலையில், இன்று சென்னை திருவான்மியூரில் மாநில மனித உரிமை ஆணையம் முன்னாள் பொறுப்பாளர் நீதிபதி ஜெயச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரிதுறை ஆகிய 3 துறைகளும் மத்திய அரசின் கீழ் வருவதால், மாநில மனித உரிமை ஆணையம் தலையிட முடியாது. தேசிய மனித உரிமை ஆணையம் தான் தலையிட முடியும் என தெரிவித்துள்ளார்.