வகுப்பறைக்குள் மனித மலம் வீச்சு - அரசு பள்ளியில் நடந்த அக்கிரமம்
அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனித மலம் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனித மலம் வீச்சு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
நேற்று பள்ளி முடிந்த பின் பள்ளியை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இன்று(29.01.2024) காலை பள்ளியை திறந்த போது, 10 ஆம் வகுப்பின் சுவர் மற்றும் மாணவர்கள் அமரும் இருக்கை மீது மனித மலம் வீசப்பட்டிருந்தது.
விசாரணை
இது குறித்து உடனடியாக பள்ளி தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மர்ம நபர்கள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா அல்லது பள்ளி மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறைக்குள் மனித மலத்தை வீசிய சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.