பேயோட்ட தர்கா சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் - நிர்வாகிக்கு போலீசார் வலைவீச்சு

sexualharassment viruthachalamcrime 54yroarrested
By Swetha Subash Mar 23, 2022 09:56 AM GMT
Report

பேயோட்டச் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தர்கா நிர்வாகியை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்து திட்டக்குடியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி சின்னபொண்ணு. 22 வயதான இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

இதனால், அக்கம்பக்கத்தினர் அவருக்கு பேய் பிடித்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே, பேய் ஓட்டுவதற்காக அவரை விருத்தாசலம் அருகே பெண்ணாடத்தில் உள்ள ஜூம்மா மசூதிக்கு அண்மையில் உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

பேயோட்ட தர்கா சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் - நிர்வாகிக்கு போலீசார் வலைவீச்சு | Human Faces Sexual Harassment In Dharga

உறவினர்களை வெளியே நிற்கச் சொல்லிய 54 வயதான ஜூம்மா நிர்வாகி அப்துல்கனி என்பவர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை வெளியில் நின்ற உறவினர்கள் பார்த்து அப்பெண்ணை மீட்டதோடு, அப்துல்கனியை பிடித்து பெண்ணாடம் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

காவல் நிலையத்தில் இருந்த அப்துல்கனி தப்பி ஓடியதால் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.