உருவாகிறது ஷகிலா படம்... நடிக்கப்போவது யார் தெரியுமா?

Actress huma qureshi shakeela biopic
By Petchi Avudaiappan Aug 03, 2021 09:13 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் திரைப்படமாக உருவாக உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷகிலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்தை மாற்றி அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

உருவாகிறது ஷகிலா படம்... நடிக்கப்போவது யார் தெரியுமா? | Huma Qureshi Stars Shakeela Biopic In Tamil

ஷகிலா எழுதிய சுயசரிதை புத்தகம் கன்னடத்தில் இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்க பாலிவுட் நடிகை ரிச்சா சத்தாவு நடிப்பில் திரைப்படமாக வெளிவந்து பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவாகி வருகிறது. அதேபோல தமிழிலும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை எடுக்க ஷகிலா திட்டமிட்டுள்ளதாகவும். அவரே இத்திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஷகிலாவாக ரஜினிகாந்துடன் காலா திரைப்படத்தில் நடத்த ஹூமா குரேஷியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விரைவில் இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.