அஜித் ரசிகர்கள் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை

humaqureshionajithfans valimaiactressaboutajithkumar humaqureshiajithkumar
By Swetha Subash Feb 18, 2022 09:35 AM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி.

இவர் அடுத்ததாக தமிழில் நடிகர் அஜித் குமாருடன் வலிமை படத்தில் நடித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாக இருக்கும் வலிமை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஹீமா நடித்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை | Huma Qureshi About Ajith Kumar Fans

இந்நிலையில் அஜித் ரசிகர்களிடமிருந்து கிடைத்த அன்பு மிக அற்புதமானது என ஹீமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர்,

“நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், நடிகர் அஜித் குமாரின் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அன்பு மிகவும் அபரிவிதமானது.

அவர்களிடமிருந்து வந்த குறுஞ்செய்திகள் எனக்கு புதிய உத்வேகத்தை அளித்தது” என கூறியுள்ளார்.