மோதலை தூண்டுவது பாஜக வேலை ..எங்களோட பாதை அன்பு பாதை : ராகுல்காந்தி

Indian National Congress Rahul Gandhi BJP
By Irumporai Jan 12, 2023 06:55 AM GMT
Report

மதங்களுக்கிடையே பாஜக அரசு மோதலை தூண்டி விடுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் முடிவடைய உள்ள நிலையில் பேசிய ராகுல் காந்தி

 மோதலை தூண்டும் பாஜக

நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை சூழல் பரவி வருகிறது. ஒரு மதத்திற்கு எதிராக மற்றொரு மதத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மோத வைக்கிறது.


எங்களோட பாதை அன்பு பாதை

  ஆனால் நாங்கள் அன்பு, சகோதரத்துவ பாதையை நாட்டுக்கு காட்ட முயன்றோம். எனவேதான் இந்த யாத்திரையை தொடங்கினோம்.

வெறுப்பு, வன்முறை, வேலையில்லா திண்டாட்டம், விலவாசி உயர்வு உள்ளிட்டவை தான் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பவும், அதற்கு எதிராக போராடவும்தான் இந்த யாத்திரை நடத்தப்படுவதாக கூறினார்.