சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பல்: மணிக்கு எத்தனை கோடி இழப்பு தெரியுமா?

money ship suez canal
By Jon Mar 26, 2021 01:48 PM GMT
Report

சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் சிக்கி, அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதன் காரணமாக மணிக்கு 40 கோடி டொலா் இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. குறித்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப்பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

1869-ஆம் ஆண்டில் நிறைவுசெய்யப்பட்ட அந்தக் கால்வாய் வழியாக உலக வா்த்தகத்தின் 12 சதவீதம் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, குறுக்கே சிக்கிக் கொண்ட கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சா்வதேச வா்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

400 மீற்றர் நீளமும் 2 லட்சம் டன் எடையும் கொண்ட அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினா் திணறி வருகின்றனா். இந்த நிலையில், சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் காரணமாக அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மணிக்கு ரூ.2,900 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  


Gallery