வீடு, கார்னு எல்லாம் இலவசம்; 15 லட்சம் பேங்க் பேலன்ஸ் வேற தராங்களாம் - குடியிருக்க வந்தா மட்டும் போதுமாம்!
வீடு, கார் என பல சலுகைகளை இலவசமாக தரும் கிராமம் குறித்து தெரியுமா?
Huaxi
சீனா, ஜியாங்யின் கவுண்டியில் ஹுவாக்ஸி Huaxi என்ற கிராமம் அமைந்துள்ளது. பணக்கார கிராமமாக கருதப்படுகிறது. கிராமம் முழுவதும் பழங்களை தரும் மரங்களால் சூழப்பட்டுள்ளன.

அதற்கிடையில், சிவப்பு-கூரை வில்லாக்கள் புல்வெளிகள் மற்றும் இரண்டு கார் கேரேஜ்கள் என காண்பதற்கு விருந்தளிக்கிறது. இது ஒரு முன்மாதிரி சோசலிச கிராமம்.
எல்லாம் இலவசம்!
1961 ஆம் ஆண்டில் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் Wu Renbao என்பவரால் நிறுவப்பட்டது. அவரது நோக்கமே ஒரு ஏழை விவசாய சமூகத்தை ஒரு பெரும் பணக்கார சமூகமாக மாற்றுவதுதான்.

அதன்படி, 400 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்திற்கு புதிதாக குடியேறும் மக்களுக்கு ஐரோப்பிய பாணி வில்லா, கார், வேலை எல்லாமே இலவசம். மேலும், கல்வி, மருத்துவ வசதி, சுகாதார வசதிகள், போக்குவரத்தும் இலவசம். இங்கு தீம் பார்க், நட்சத்திர விடுதிகள் ஹெலிகாப்டர் டாக்சிகள், என்று எல்லா ஆடம்பர வசதிகளும் உள்ளன.

74 தள கட்டிடம், சிட்னி ஓபரா ஹவுஸ், நாஞ்சாங்கில் பெரிய சுவவர், அமெரிக்காவின் சுதந்திர தேவி போன்ற உலக புகழ்பெற்ற கட்டிட அமைப்புகளின் பிரதிகளையும் கொண்டுள்ளது. இந்த வசதிகள் எல்லாம் இங்கு இருக்கும் வரை மட்டுமே அனுபவிக்க முடியும். இந்த கிராமத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் எல்லாவற்றையும் இந்த கிராம நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு போக வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan