விவாகரத்துக்கு பின் காதலில் விழுந்த பிரபல நடிகர் - வெளியான வீடியோவால் பரபரப்பு
பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் விவாகரத்துக்குப் பின் வேறு நடிகையுடன் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரித்திக் ரோஷன் தனது காதல் மனைவியான சூசன் கானை 14 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பின் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இதன்பின் சூசன் கான் நடிகர் அர்ஸ்லான் கோனியை காதலித்து வருகிறார். இதனிடையே மும்பையில் இருக்கும் உணவகம் ஒன்றில் இருந்து ஒரு பெண்ணின் கையை பிடித்தபடி ரித்திக் வெளியே வந்து காரில் ஏறியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.
அந்த பெண் தில் கபடி படம் மூலம் 2008 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான வளர்ந்து வரும் நடிகையான சபா ஆசாத் ஆவார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்தாண்டு ஃபீல்ஸ் லைக் இஷ்க் என்ற படம் வெளியானது. மேலும் ரித்திக் ரோஷன் சில காலமாகவே சபாவை காதலித்து வருகிறார் என்றும், இது வெளியுலகத்திற்கு தெரியாமல் பார்த்துக் கொண்டாதாகவும் பாலிவுட்டில் தரப்பில் கூறப்படுகிறது.