டெல்லியில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை... திண்டாடிய மக்கள்.. ஒருவர் பலி
டெல்லியில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் கொளுத்தியதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக அங்கு அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியதால் சாலைகளில் வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். ஆலங்கட்டி மழையை கொஞ்சமும் எதிர்பார்க்காத மக்கள் மகிழ்ச்சியடைந்து பல இடங்களில் ஓடி ஓடிச் சென்று சேகரித்தனர். பலர் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டனர்.
பல இடங்களில் வாகன நெரிசலும், பலத்த காற்றால் விமானங்கள் புறப்படுவதில் தாமதமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கபுதார் மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் 65 வயது முதியவர் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த திடீர் மழை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.