நான் சொல்றவங்களை ஹீரோயினா கமிட் செய்யுங்க; ஹெச்.ராஜா சொன்னது - இயக்குநர் ஓபன்டாக்!
கந்தன் மலை திரை அனுபவம் குறித்து இயக்குநர் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஹெச்.ராஜா
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா 'கந்தன் மலை' எனும் படத்தில் நடித்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இப்பட இயக்குநர் வீர முருகன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஸ்கிரிப்டே ராஜா சாருடையதுதான். அவர்தான் ஸ்கிரிப்டைக் கொடுத்து 'இந்தக் கதையை எடுக்கலாம், ரெடி பண்ணுங்க'னு சொன்னார். ஆதிங்கிற கேரக்டர்ல அதாவது படத்துக்கு ரொம்பவே முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார்.
அதாவது நாயகன் படத்துல கமல் நடிச்சிருப்பாரே அதை மாதிரி வசிக்கிற ஏரியாவுக்கு நல்லது செய்கிற கேரக்டர். மதுரை, காரைக்குடி சுற்று வட்டாரத்துல ஷூட்டிங் நடந்தது. அவ்வளவு அழகா ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு சீன்ல அவரை எதிரி அடிக்கிற மாதிரி இருக்கும்.
இயக்குநர் தகவல்
ஷூட்டிங்கிற்கு அவர் கூடவே வருகிற அவரது கட்சித் தொண்டர்கள் அந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அந்தச் சமயத்துல 'நடிக்க வந்துட்டா டைரக்டர் சொல்றதைக் கேக்கணும்ப்பா, எல்லாரும் பேசாம இருங்க'னு அவங்களை அமைதிப்படுத்தினார்.
அதேபோல படத்துல அவருக்கு ஒரு ஜோடி இருக்காங்க. இதுக்கு ஆடிசன் வைக்கலாம்னு நினைச்சு அவர்கிட்ட கேட்டப்ப, 'சும்மாவே நம்மை ட்ரோல் செய்வாங்க, இதுல இது வேறயா, சரி படத்துல ஹீரோயின் அவசியம் இருந்தே ஆகணூம்னா
நான் சொல்றவங்களைக் கமிட் செய்யுங்க'னு சொல்லி அவருடைய மனைவியையே கூட்டி வந்துட்டார். படத்துல அவங்கதான் அவருக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க எனத் தெரிவித்துள்ளார்.