என்ன ஹெச் ராஜாவை காப்பியடித்தாரா கமல்ஹாசன்?

kamalhassan hraja white paper
By Irumporai Aug 10, 2021 06:28 PM GMT
Report

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசின் நிர்வாகம் பெற்ற கடன்கள் செலவு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தன.

   குறிப்பாக இந்த வெள்ளை அறிக்கையில் ஒவ்வொரு தமிழரின் குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் இருப்பதும் தெரிவிக்கப்பட்டது தமிழக மக்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக அரசின் வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துக்களை கூறி வரும் நிலையில் நடிகரும் ம.நீ.ம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில்:

கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதே கருத்தை கமல்ஹாசன் பதிவிடுவதற்கு முன்பாக பாஜகவை சேர்ந்த ஹெச் ராஜா தனது ட்விட்டர் பதிவில் நேற்று தமிழக நிதியமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சள் கடுதாசியா? என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து கமல்ஹாசன் எச் ராஜாவின் ட்விட்டை காப்பி அடித்தாரா என்ற கேள்விஎழுப்பி வருகின்றனர்.