கோர்டுக்கு நான் கட்டுப்படுறேன் : முன் ஜாமீன் கேட்கும் ஹெச்.ராஜா!

tamilnadu bjp bail hraja
By Irumporai Jul 13, 2021 03:06 PM GMT
Report

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரனை அவதூறாக பேசியதாகவும் பணி செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்ற பத்திரிக்கையில் தான் தலைமறைவாக உள்ளதாக தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரங்கேறியுள்ளதாகவும் கூறி ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் ஜாமின் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்ற தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.