வந்துவிட்டது LPG ATM... வெறும் 3 நிமிடத்தில் எரிவாயு சிலிண்டரை பெறுவது எப்படி?
சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்தியாவில் அதிகமாகி வருவதால், நாட்டின் முதல் LPG ATM திறக்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
LPG ATM
பணம் எடுப்பதற்கு நாம் ஏடிஎம் மெஷினைப் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது சமையல் எரிவாயுவை பெறுவதற்கும் ஏடிஎம் வந்துள்ளது.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நடந்துவரும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்கள் சிறிது தடையில்லாமல் செல்லும் நிலையில், கடைகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வெளியூர், வெளிமாநிலங்களில் பணிபுரிபவர்கள் சாப்பாடு கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் எல்பிஜி வெண்டிங் மெஷில் இந்தியாவில் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா, செக்டர் 33-ல் (Central Park Flower Valley) நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
LPG ATM எவ்வாறு செயல்படும்?
பாரத் பெட்ரோலியம் நிறுவிய இந்த எல்பிஜி வெண்டிங் மெஷினில் 2 அல்லது 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டரை பெற முடியும்.
இதனை சுலபமாக பெறுவதற்கு எளிய டிஜிட்டல் செயல்முறையினை முடிப்பது மட்டுமே. பாரத்கேஸ் இன்ஸ்டா எல்பிஜி என்று அழைக்கப்படும் எல்பிஜி ஏடிஎம் அதிகாரப்பூர்வமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் மக்களின் பயன்பாட்டிற்கு தற்போது தான் இயங்குகின்றது. மேலும் 24 மணி நேரம் இவை செயல்படுமாம்.

முதலில், இயந்திரத்தின் திரையில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
பின்பு மொபைல் எண்ணிற்கு வரும் OTPஐ உள்ளிட்டு, சரிபார்த்த பின்பு, சிலிண்டரில் உள்ள QR அல்லது பார்கோடை இயந்திரத்தின் ஸ்கேனர் முன்பு காட்டவும்.
குறித்த சிலிண்டர் செல்லுபடியாகுமா என்பதை சரிபார்த்த பின்பு, இயந்திரத்திலிருந்து ஒரு ஜன்னல் திறக்கும். அதனுள் சிலிண்டரை சரியாக வைக்க வேண்டும்.
திரையில் காட்டப்படும் எரிபொருள் விலையினை UPI மூலம் செலுத்த வேண்டும்.பின்பு நிரப்பப்பட்ட சிலிண்டரை இயந்திரத்தில் டெலிவரி ஜன்னல் வழியாக வெளியே வரும். அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ளலாம்.
எல்பிஜி ஏடிஎம் மெஷினில் 10 கிலோ காம்போசிட் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ள முடியும். ஒரே நேரத்தில் 10 சிலிண்டர்களை மட்டுமே கேஸ் நிரப்ப முடியும்.
குறைந்தது இரண்டு சிலிண்டர்கள் இருந்தால், இயந்திரம் தானாக அருகில் உள்ள எரிவாயு ஏஜென்சிக்கு எச்சரிக்கை அனுப்பி கேஸை நிரப்ப வைக்குமாம்.

இரும்பு சிலிண்டரை எவ்வாறு மாற்றலாம்?
பாரத் கேஸ் ஏஜென்சிக்கு உங்களது இரும்பு கேஸ் சிலிண்டர் மற்றும் ஆவணத்துடன் கொண்டு சென்று, இதனை காம்போசிட் சிலிண்டராக மாற்றிக் கொள்வதாக கூறவும்.
ஏற்கனவே பழைய சிலிண்டரின் பாதுகாப்பு வைப்புத் தொகையான சுமார் ரூ.1,450 இருக்கும். ஆனால் புதிதாக வாங்கும் காம்போசிட் சிலிண்டருக்கு 3,350 ரூபாய் ஆகும். இதனால் மீதம் தொகை செலுத்தினால் சிலிண்டர் கம்பெனி புதிய சிலிண்டரை வழங்கும்.
பின்பு நீங்கள் LPG ATM-க்குச் சென்று 2 நிமிடங்களில் ரீஃபில் செய்து கொள்ளலாம்.