இனி வாட்ஸ்அப்பில் சேட் மட்டுமில்லை; ChatGPT வசதியும் உண்டு - எப்படி பயன்படுத்துவது?
இனி வாட்ஸ்அப்பிலே ChatGPTயை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ChatGPT
AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. AI தொழில்நுட்ப அடிப்படையில் பல்வேறு சேட்பாட்கள்(ChatBot) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் openAI நிறுவனம் உருவாக்கியுள்ள ChatGPTயானது பயனர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தருவதோடு, பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
வாட்ஸ்அப்
மாணவர்கள் தங்களது வீட்டு பாடம் செய்வதில் தொடங்கி ஐடி ஊழியர்கள் கோடிங் எழுதுவது வரை ChatGPTயின் உதவியை நாடி வருகின்றனர். இந்நிலையில் ChatGPTயின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், வாட்ஸ்அப்பிலே ChatGPTயை பயன்படுத்தும் வகையில் openAI நிறுவனம் எளிமைப்படுத்தியுள்ளது.
+18002428478 என்ற வாட்ஸ்அப் எண்ணில் ChatGPTயின் சேவையை பெற முடியும். இதில் ChatGPT பெயருக்கு அருகே ப்ளூ டிக் இருப்பதன் மூலம் அதிகாரபூர்வ ChatGPTதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் பணம் செலுத்திய ChatGPT Plus கணக்கை WhatsApp உடன் இணைக்க முடியாது.
நீங்கள் அனுப்பக்கூடிய செய்திகளின் எண்ணிக்கையில் தினசரி வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புகளை நீங்கள் அடைந்தால், உங்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும். விரிவான பயன்பாடு அல்லது கூடுதல் அம்சங்கள் தேவைப்படுபவர்களுக்கு, ChatGPT செயலி அல்லது இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.