இதென்ன சபாநாயகரே ..இந்த உறவை எப்படி புரிந்து கொள்வது - சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகனால் சிரிப்பலை!
சட்டபேரவையில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கலகலப்பாக பதில் தந்து அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார் .
சட்டபேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசும் போது 'நானும் ஒரு ஆசிரியர் நீங்களும் ஒரு ஆசிரியர் எனக்கு கூடுதல் நேரம் வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட துரைமுருகன் சபாநாயகரை பார்த்து அது என்ன பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது நாமெல்லாம் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றவர்கள் என்று குறிப்பிட்டு கூடுதல் நேரம் வழங்குவதாக கூறுகிறீர்கள்.
இப்போது நானும் ஆசிரியர் நீங்களும் ஆசிரியர் நேரம் கூடுதலாக வழங்குவேன் என்று கூறுகிறீர்கள்.
திருநெல்வேலி காரர்கள் யாராவது வந்தால் அவர்களுடனும் உறவு கொண்டாடுகிறீர்கள். இந்த உறவை எப்படி புரிந்து கொள்வது என நகைச்சுவையாக கேள்வி எழுப்ப சட்ட சபையில் இருந்த உறுப்பினர்கள் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் இல்லாமல் சிரிப்பலையில் மூழ்கியது.