விடுமுறை நாட்களில் டைம்பாஸ் பண்ண இதோ எளிய வழி - மாவட்ட ஆட்சியரின் அட்வைஸ்

virudhunagarcollector Meghanath Reddy J
By Petchi Avudaiappan Dec 27, 2021 04:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு ஐடியா கொடுத்துள்ளார். 

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்த காலக்கட்டத்தில்  நேரடி சிறப்பு வகுப்புகளோ, இணையவழி பயிற்சிகளோ நடைபெறுகிறது என புகார் வரும் பட்சத்தில் அப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி மாணவர்கள் தங்களது விடுமுறையை எவ்வாறு செலவிடுவது என்பது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தம்பிகளா, விடுமுறையை எவ்வாறு செலவிடுவது.. குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களுடனும் 50 சதவீத நேரத்தை செலவிடுங்கள். மொபைல், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களுக்கு 10 சதவீத நேரத்தை செலவிடுங்கள். 20 சதவீத நேரத்தை விளையாடவும் 20 சதவீத நேரத்தை ஓய்வுக்கும் செலவிடுங்கள். படிங்கள், மீண்டும் படிங்கள். இது புத்தாண்டு விடுமுறை மட்டுமே, ஆண்டு விடுமுறை அல்ல. பாதுகாப்பாக இருங்கள்  என்று பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இயங்கும் மேகநாத் ரெட்டி மாவட்ட மக்கள், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக நகைச்சுவையாக பதிலளித்து அனைத்து தரப்பினரிடத்திலும் பாராட்டை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.