ரேஷன் கடைக்கு பதிலாக தக்காளியை இப்படி விற்பனை பண்ணுங்க - செல்லூர் ராஜு அட்வைஸ்..!
ரேஷன் கடைகளில் தக்காளியை அரசு விற்பனை செய்து வரும் நிலையில், அதற்கு பதிலாக இவ்வாறு விற்பனை செய்யுங்கள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
விண்ணை முட்டும் தக்காளி விலை உயர்வு
அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்த்து வருகிறது.
ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், நடுத்தரவர்க மக்கள் பலரும் இதனால் அவதியுற்று வருகின்றனர்.
தினமும் சமையலில் அத்தியாவசிய பொருளான தக்காளி கடுமையாக விலையுயர்வை கட்டுப்படுத்த முடியாமல் அரசும் திணறி வருகிறது.
குறைந்த விலைக்கு தமிழக அரசு தக்காளியை தற்போது ரேஷன் கடைகளில் விநியோகம் செய்து வருகிறது. நேற்று முதல் தமிழகமெங்கும் 500 கடைகளில் தக்காளியின் விநியோகம் நடைபெற்று வருகிறது.
செல்லுார் ராஜு அறிவுரை
கிலோ ஒன்று 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் விறக்கப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், ரேஷன் கடைகளில் சென்று தக்காளி வாங்க பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும்,
அதன் காரணமாக கூடுதல் ரேஷன் கடைகளில் விநியோகம் மேற்கொள்ள பட வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தள்ளுவண்டிகளில் தக்காளியை விநியோகம் செய்யலாமே? என அறிவுரை வழங்கியுள்ளார்.
மக்கள் ரேஷன் கடைகளில் தக்காளி வாங்க பெரும் சிரமப்படுவதால், தெரு தெருவாக தள்ளு வண்டியில் தக்காளியை விநியோகம் செய்தால் அவர்களது சிரமத்தை குறைக்கலாமே? என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.