அரிசியில் வண்டு அதிகமாக இருக்கா?அப்போ இதை பண்ணுங்க போதும் - சூப்பர் டிப்ஸ்!
அரிசியில் வண்டு அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரிசி
நாம் அன்றாட உணவிற்கு அரிசி ,பருப்பு, உள்ளிட்டவை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறோம். மளிகைக் கடையிலிருந்து ஒரு மாதத்துக்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் அப்படிச் செய்தால் அரிசி ,பருப்பு, உள்ளிட்ட பொருள்களில் சில தினங்களிலேயே கருப்பு மற்றும் புழுக்கள் உருவாக ஆரம்பித்துவிடும்.இதனை சுத்தம் செய்வது மிகவும் கடிமான வேலையாக இருக்கும்.
இதனை வீட்டில் உள்ள பொருள்களை வைத்து அரிசி மற்றும் பருப்புகளில் உள்ள புழு மற்றும் பூச்சிகளை எவ்வாறு சுத்தம் செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் வேப்ப இலைகளை எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டுக் கொள்ள வேண்டும்.
வண்டு
பின்னர் அதை அரிசி சேமித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் வைத்து, அதை வெயிலில் காய வைக்கவும். முக்கியமாக அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தை மூடக்கூடாது.இரண்டாவது வழி அரிசி பாத்திரத்தில் 8 முதல் 9 கிராம்புகளை வைத்து இருண்ட இடத்தில் வைக்கவும்.
கிராம்புகளில் உள்ள வாசனையால் புழு மற்றும் பூச்சிகள் வெளியேறிவிடும். மூன்றாவது வழி தோல் உரித்த பூண்டை அரிசி பாத்திரத்தில் வைக்கவும். பூண்டின் வலுவான வாசனையால் புழுக்கள் மற்றும் பூச்சிகள் வெளியேறிவிடும்.