உடலில் சேரும் கெட்ட கொழுப்பு குறைய என்ன செய்ய வேண்டும்?

Life Style
By Sakthi Raj Feb 19, 2026 01:30 PM GMT
Report

ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமான உடல் தான் மிகப்பெரிய சொத்தாகும். அந்த வகையில் நாம் சாப்பிடுகின்ற உணவில் அதிக அளவில் கவனம் செலுத்தி அவ்வப்போது நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்தால் நிச்சயம் நம் உடல்நிலை சீராக இருக்கும். அந்த வகையில் ஒரு சிலர் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்து விடும்.

அதனால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை அவர்களுக்கு உண்டு செய்துவிடும். அவ்வாறு உடல் கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் அதை குறைப்பது மிகவும் கடினமாக இருந்தாலும் சரியாக நாம் குறிப்பிட்ட சில வேலைகளை செய்யும் பொழுது நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். அதைப் பற்றி பார்ப்போம்.

உடலில் சேரும் கெட்ட கொழுப்பு குறைய என்ன செய்ய வேண்டும்? | How To Reduce Excess Fat In Body

முடி அடர்த்தியாகவும் விரைவாகவும் வளர ஆளி விதை ஹேர் மாஸ்க்.. எப்படி செய்வது?

முடி அடர்த்தியாகவும் விரைவாகவும் வளர ஆளி விதை ஹேர் மாஸ்க்.. எப்படி செய்வது?

ஒரு சிலருக்கு உழைப்பின்றி இருக்கையில் அமர்ந்தபடியே பகல் முழுவதும் வேலை பார்க்கக்கூடிய அமைப்பு இருக்கும். அவர்கள் கட்டாயம் உணவை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் உழைப்பு இல்லாததால் உணவானது உடலில் கசடுகளாக தங்கி நமக்கு ஒரு சில துன்பத்தை கொடுக்ககூடும்.

நோய் எதிர்ப்பு சக்திகயை பலமடங்கு அதிகரிக்கும் வெள்ளை 'டீ'

நோய் எதிர்ப்பு சக்திகயை பலமடங்கு அதிகரிக்கும் வெள்ளை 'டீ'

அதனால் நாள் முழுவதும் அமர்ந்து வேலை செய்பவர்கள் எளிதில் உணவு ஜீரணமாக காய்கறிகள், பழங்கள் மற்றும் ஒரு கப் அளவான சாதம் எடுத்துக்கொண்டு அரை வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு கால் வயிற்றுக்கு நீர் குடித்தாலே சரியானதாக இருக்கும்.

ஆக கொழுப்பு சார்ந்த எண்ணெய் பொருட்கள், பால், தயிர், வெண்ணெய், நெய், தேங்காய் போன்றவற்றில் தயாரான உணவு பொருட்களை இவர்கள் குறைத்துக் கொண்டாலும் வீணாக உடலில் கூடக்கூடிய கொழுப்புகளை குறைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.