சர்க்கரை நோயாளிகள் தயவு செய்து இதையெல்லாம் சாப்பிடாதீங்க!
சர்க்கரை நோய் வருவதற்கு காரணம் இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாக சுரப்பது,சுரந்த இன்சுலின் சரியாக சுரக்காதது ஆகியவை இந்த நோய் வருவதற்கு காரணமாகும்.
இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் இந்த நோய் வந்துவிடும்.பெரும்பாலும் இந்த நோய் இந்தியாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் உடல் பருமன் உள்ள 100லிருந்து 80 சதவீத பேரை அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நோய் வராமல் தடுப்பது எப்படி?
மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் கொழுப்புச் சத்துள்ள உணவு பொருட்களையும் குறைவாக சாப்பிட வேண்டும்.
இனிப்பு அதிகமாவுள்ள உணவு வகைகளை குறைப்பது மிக அவசியம்.
எண்ணெய் பொரித்த,வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த காய்கறி,பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
குளிர்பானங்களை குடிப்பதை குறைத்து கொள்வது மிக அவசியம்.
தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி/உடற்பயிற்சி செய்தால் இதை தடுக்கலாம்.
உடல் எடையை சீராக வைப்பது மிகவும் அவசியம்.
You May Like This