இனி வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் தயார்

Healthy Food Recipes Ghee
By Sakthi Raj Feb 07, 2026 12:01 PM GMT
Report

நம் வீடுகளில் சமைக்கும் உணவுகளில் நெய் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நெய்யை பலரும் கடைகளில் வாங்குகிறார்கள். ஆனால் வீடுகளில் நாம் மிக எளிமையாக நெய் தயார் செய்ய முடியும். அதை பற்றி பார்ப்போம்.

வீடுகளில் சுத்தமான மற்றும் வாசனையான நெய் செய்வதற்கு நாம் தினமும் ஒரு சில மணித்துளிகள் செலவு செய்தால் போதும்.

அப்படியாக நாம் நெய் செய்ய தினசரி வீட்டில் பயன்படுத்தக்கூடிய பாலில் இருந்து பால் ஏடு எடுத்து சேகரித்துக் கொள்ள வேண்டும். அதை 10 முதல் 12 நாட்களுக்கு சேகரித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

இனி வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் தயார் | How To Prepare Fresh Ghee At Home

இறாலில் கருப்பு நரம்பை நீக்காவிட்டால் என்ன நடக்கும்?

இறாலில் கருப்பு நரம்பை நீக்காவிட்டால் என்ன நடக்கும்?

இவ்வாறு சேகரித்துக் கொண்டிருக்க போதுமான பால் ஏடு சேர்ந்த பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பிறகு கிடைத்த வெண்ணையை ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வைத்து உருக்க வேண்டும்.

இவ்வாறு மிதமான தீயில் வைத்து உருக்கும் பொழுது வெண்ணை உருகி நெய்யாக பிரிந்து வரும். இவ்வாறு நெய் பொன்னிறமான பிறகு அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆற வைத்து அதை சுத்தமான வடிகட்டியில் வடிகட்டும்பொழுது நமக்கு வீட்டிலேயே சுவையான மற்றும் வாசனையான நெய் கிடைத்துவிடும்.

இதயத்தை பலப்படுத்தும் சிறந்த உணவு.. என்ன தெரியுமா?

இதயத்தை பலப்படுத்தும் சிறந்த உணவு.. என்ன தெரியுமா?

தேவைப்பட்டால் நீங்கள் நெயில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உப்பு சேர்க்காமல் பயன்படுத்துவது நன்மை தரும்.