கணவரை கொலை செய்வது எப்படி? : கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

By Irumporai Jun 14, 2022 06:09 PM GMT
Report

"கணவரை கொலை செய்வது எப்படி?" என்ற கட்டுரையின் மூலம் பிரபலமான அமெரிக்க பெண் எழுத்தாளர் நான்சி கிராம்ப்டன் புரோபி 71 வயதான கிராம்ப்டனுக்கு தனது கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர் நான்சி கிராம்ப்டனின் கணவர் டேனியல் புரோபி சமையல் கலை நிபுணராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நான்சியும், டேனியல் புரோபியும் நிதி நெருக்கடியில் தவித்து வந்துள்ளனர்.

பணத்திற்காக கணவரை கொண்ட எழுத்தாளர்

தனது கணவருடன் பிரச்சினையிலும் சிக்கினர். இந்த நிலையில் கணவர் டேனியல் புரோபி பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்திற்காக, அவரை நான்சி 2018-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றார்.

இது தொடர்பாக நடந்த விசாரணையிதான் ஒரேகான் மாகாண நீதிமன்றம், நான்சிக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. விசாரணையில் என் நாவல் ஆராய்ச்சிக்காகவே துப்பாக்கியை வாங்கினேன் என நான்சி தெரிவித்தார்.

கணவரை கொலை செய்வது எப்படி? :  கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் | How To Murder Your Husband Murdering Husband

மேலும் நான் எந்தத் திட்டமும் இல்லாமல்தான் உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி? என்ற கட்டுரையை எழுதினேன். அதில் எந்த நோக்கமும் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் எனது கணவரை கொல்வதற்காக அந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை என்று கூறினார்.

கணவரை கொலை செய்வது எப்படி? :  கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் | How To Murder Your Husband Murdering Husband

ஆயுதண்டனை விதித்த நீதி மன்றம்

இந்த நிலையில் அவரது பெயரில் இருந்த 9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணமும், இரண்டேகால் கோடி ரூபாய் வீடும் நான்சி வசம் சென்றது. கொலை நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது நான்சி அங்கு இருந்துள்ளது தெரியவந்தது.

நான்சி தனது கணவரை கொல்வதற்கு 7 வருடங்களுக்கு முன்னர்தான் உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி? என்ற கட்டுரை நான்சி எழுந்தி இருந்தார். இதன் காரணமாக இவரது வழக்கு அமெரிக்காவில் பரவலாக பேசப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.